செவ்வாய் கிரகத்தில் தென்படும் மர்ம மனித முகம் - நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்!
செவ்வாய் கிரகத்தில் இருந்து மற்றொரு தனித்துவமான படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ரோவர் அங்கு ஒரு பாறையை கண்டுபிடித்துள்ளது, அது ஒரு கோணத்தில் பார்த்தால் மனித முகம் போன்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் செப்டம்பர் 27 அன்று நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கப்பட்டது.
இது வண்டல் மணற்கல் துண்டு போல் தெரிகிறது, அருகிலுள்ள மற்ற பாறைகளிலிருந்து வேறுபட்டது போன்று காட்சியளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
சீரற்ற பொருட்களில் அர்த்தமுள்ள வடிவங்கள் மற்றும் உருவங்களை அங்கீகரிப்பது பரீடோலியா என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களிலும் இதுவே தென்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |