பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் வென்ற பதக்கம் திரும்ப பெறுவதாக அறிவிப்பு! காரணம் இது தான்
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத்குமார் பெற்ற பதக்கம் திரும்ப பெறப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 6-வது நாளான நேற்று வட்டு எறிதல் வீரர் வினோத்குமார் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். அவர் எப்52 பிரிவில் (தசைபலம் தளர்வு, கை, கால்களில் குறைபாடு மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளோர்) 19.91 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெண்கலப்பதக்கத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் வினோத்குமாரின் மாற்று திறனில் எழுப்பபட்ட சந்தேகத்தின் காரணமாக வெற்றி விழா ஆகஸ்ட் 30 திகதி மாலை அமர்வுக்கு தள்ளி வைக்கப்படுவதாகவும் பாராலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
இந்த நிலையில், வினோத் குமாரின் வெண்கல பதக்கம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக்குழுவினர் எடுத்த முடிவில் அடிப்படையில் வினோத்குமாரின் பதக்கம் திரும்பப்- -பெறப்பட்டுள்ளது. வட்டு எறிதல் எப்52 பிரிவில் பிரிவில் வினோத் பங்கேற்க தகுதியற்றவர் தொழில் நுட்ப குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.