சிறைக்கைதியான தாயாரை தந்திரமாக மீட்டுச் சென்ற இன்ஸ்டாகிராம் மொடல்: வெளியான காணொளி
கொலம்பியாவில் பிரபல மொடல் ஒருவர், சிறையில் இருக்கும் தமது தாயாரை தந்திரமாக மீட்டுச் சென்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தற்போது நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பபட்டுள்ளது. 21 வயதான Aida Victoria Merlano என்பவரே, கொலம்பியாவின் பொகோடா சிறையில் இருந்து தமது தாயாரை தந்திரமாக மீட்டுச் சென்றவர்.
கயிறு மற்றும் தமது இருச்சக்கர வாகனம் மூலமே, குறித்த மொடல் தமது தாயாரை மீட்டுச் சென்றுள்ளார். தேர்தல் முறைகேடு, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல், ஊழல் மற்றும் தேர்தலில் வாக்காளர்கள் தொடர்பில் முறைகேட்டில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றங்களுக்கு Aida Merlano Rebolledo தண்டிக்கப்பட்டிருந்தார்.
தேர்தலில் வெற்றிபெற்ற 6 மாதங்களில் Rebolledo மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு 15 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு விதிக்கப்பட்டார். 2019ல் நடந்த இச்சம்பவத்தில், Rebolledo சிறைக்கு சென்ற இரண்டு வாரத்தில் அவரது மொடல் மகள் அவரை மீட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த மொடல் மீது வழக்கு பதியப்படு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று Rebolledo தமக்கு பல் வலி இருப்பதாக கூறி சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளார்.
தொடர்ந்து சிறைக்காவலர் மற்றும் சாரதி ஒருவருடன் மருத்துவரை காண சிறைக்கு வெளியே சென்றுள்ளனர். இந்த நிலையில், மருத்துவரை காண தனியாக அறைக்குள் நுழைந்த Rebolledo-வை அவரது மகள் ஜன்னல் வழியாக புகுந்து தந்திரமாக கடத்திச் சென்றுள்ளார்.
இந்த விவகாரம் பொகோடா நகரில் கொந்தளிப்பை ஏற்படுத்த, அதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் மொடல் Aida Victoria Merlano. இதனிடையே, 2020ல் வெனிசுலா நாட்டில் பதுங்கியிருந்த Rebolledo-வை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற விசாரணையில் தாயாரும் மகளும் தாங்கள் குற்றமற்றவர்கள் என கூறி நாடகமாடியுள்ளனர்.
இருப்பினும், இவர்கள் இருவர் மீதான குற்றங்கள் நிரூபணமானால், மீண்டும் சிறைவாசத்திற்கு செல்ல வேண்டியிருக்கும் என்றே கூறப்படுகிறது.