விவாகரத்து வழக்கில் திருப்பம்! வீட்டு வேலைகளுக்கு ₹30 லட்சம் இழப்பீடு வாங்கிய மனைவி: அதிர்ந்த கணவர்!
திருமண பந்தம் மகிழ்ச்சியுடன் தொடங்கி, காலப்போக்கில் கருத்து வேறுபாடுகளால் முடிவுக்கு வரும்போது, மணமுறிவு தவிர்க்க முடியாததாகிறது.
இந்த சட்டப்பூர்வ செயல்முறையில், சொத்துக்களை பிரிப்பது, குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பொறுப்புகளை வரையறுப்பது போன்ற சிக்கல்கள் எழுகின்றன.
சமீபத்தில், சீனாவில் நடந்த ஒரு மணமுறிவு வழக்கு, நீதித்துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது.
வழக்கின் பின்னணி
ஹு (Hu) மற்றும் அவரது மனைவி 2011-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
காலப்போக்கில், குழந்தையின் கல்வி தொடர்பான கருத்து வேறுபாடுகள் தலைதூக்கவே 2022-ல் ஹு வீட்டை விட்டு வெளியேறினார்.
மேலும் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஹு விவாகரத்து கோரியும் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
மனைவியின் கோரிக்கை
விவாகரத்து நடைமுறையின் போது, மனைவி தனது மகளின் காவலுரிமையையும், சொத்துக்களில் பங்கும் கேட்டுள்ளார்.
அத்துடன் அவர் பல ஆண்டுகளாக செய்த ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளுக்காக 50,000 யுவான் (சுமார் ₹6 லட்சம்) இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
வீட்டு வேலைகளை செய்வதற்கும், குழந்தையை வளர்ப்பதற்கும் தனது வேலையை தியாகம் செய்ததாகவும் மனைவி நீதிமன்றத்தில் வாதிட்டார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
வழக்கு விசாரணையின் இறுதியில் நீதிமன்றம் குழந்தையின் பராமரிப்புக்காக கணவர் ஹு மாதாந்திர நிதி உதவி மற்றும் ₹30 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் வழக்கில் பெரிய திருப்பமாக வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பில், மனைவி கோரிய இழப்பீட்டை விட ஐந்து மடங்கு அதிகமாக, அதாவது ₹30 லட்சம், ஹு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்பு குறித்து விளக்கமளித்த நீதிபதி, வீட்டு வேலை என்பது இருவரின் பொதுவான பொறுப்பு, ஒருவரின் சுமை மட்டுமல்ல, ஒரு தரப்பினர் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற தவறினால், அவர்கள் மற்றவருக்கு நிதி ரீதியாக ஈடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |