மகளிர் செஸ் உலகக்கோப்பை - சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக்
மகளிர் செஸ் உலகக்கோப்பையில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
திவ்யா தேஷ்முக்
2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்தும் மகளிர் செஸ் உலகக் கோப்பை, ஜார்ஜியாவின் படுமியில் உள்ள கிராண்ட் பெல்லாஜியோ ஹோட்டல் & கேசினோவில் நடைபெற்றது.
ஜூலை 22 , அன்று நடந்த அரையிறுதியின் இரண்டாவது ஆட்டத்தில் சீனாவின் முன்னாள் உலக சாம்பியனான ஜோங்கி டானை தோற்கடித்து இந்தியாவின் திவ்யா தேஷ்முக் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், சக இந்திய வீராங்கனையான ஹம்பி கோனேருவை வீழ்த்தியதன் மூலம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
🇮🇳 Divya Deshmukh defeats Humpy Koneru 🇮🇳 to win the 2025 FIDE Women's World Cup 🏆#FIDEWorldCup pic.twitter.com/h12I7X56kw
— International Chess Federation (@FIDE_chess) July 28, 2025
இதன் மூலம், கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற 4 வது இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக ஹம்பி, வைஷாலி மற்றும் ஹரிகா துரோணவள்ளி ஆகிய மூவரும் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றிருந்தனர்.
19 வயதான திவ்யா தேஷ்முக், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் ஆவார். திவ்யா தேஷ்முக் ஆசிய சாம்பியன்ஷிப் , உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் மற்றும் உலக இளைஞர் சாம்பியன்ஷிப் ஆகியவற்றிலும் பல தங்கங்களை வென்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |