மெஸ்ஸியைப் போல் 90 நிமிடங்கள் விளையாடுவது நன்றாக இருக்கும்: ஜோகோவிச் கிண்டல்
நீண்ட நேர போட்டியை விளையாடிய ஜோகோவிச், அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸியை மறைமுகமாக கிண்டல் செய்தார்.
ஜோகோவிச்
விம்பிள்டன் காலிறுதிப் போட்டியில், பிரபல டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் 5 மணிநேரம் 15 நிமிடங்கள் வரை விளையாடினார்.
கனேடிய வீரர் அகர் அலியாஸிமேவை அவர் 7-6 (10), 3-6, 6-3, 6-7 (4), 7-6 (4) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
39 வயதாகும் நோவாக் ஜோகோவிச் (Novak Djokovic) விம்பிள்டன் வரலாற்றிலேயே மிக நீண்ட காலியிறுதிப் போட்டியை விளையாடியிருக்கிறார்.
மெஸ்ஸி குறித்து கிண்டல்
அவர் தனது வயதில் FIFA உலகக்கிண்ணத்தில் விளையாடும் மெஸ்ஸி (Messi) குறித்து பேசினார்.
ஜோகோவிச் கூறுகையில், "அவரைப் போல 90 நிமிடங்கள் விளையாடுவது நன்றாக இருக்கும்" என்றார்.
இதன்மூலம் 5 மணிநேரம் விளையாடி தான் வெற்றி பெற்றதை குறிப்பிட்டு ஜோகோவிச் கிண்டல் செய்துள்ளார்.
முன்னதாக, "மெஸ்ஸியைப் போலவும், லெப்ரான் ஜேம்ஸைப் போலவும் மகத்துவம் உருவாகுவதையும், அதன் பரிணாம வளர்ச்சி தொடர்வதையும் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது" என ஜோகோவிச் கூறியிருந்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |