அர்ஜென்டினாவிடம் தோல்வி: நடுவர் குழுவை நீக்க FIFA-விடம் எகிப்து புகார்
எகிப்திய கால்பந்து கூட்டமைப்பு நிர்வாக அமைப்பு FIFA-விடம் புகார் அளித்துள்ளது.
எகிப்து தோல்வி
அட்லாண்டாவில் நடந்த போட்டியில் அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்து தோல்வியடைந்தது.
இப்போட்டியில் நடுவர்களின் பல முக்கிய முடிவுகள் அணிக்கு எதிராக அமைந்ததாக எகிப்து குற்றம்சாட்டியது.
ஸ்பானிய வெளியீடான Diario AS-யின் அறிக்கையின்படி, எகிப்து கால்பந்து சங்கத்தின் தலைவர் ஹனி அபோ ரிடா, பிரெஞ்சு நடுவர் Francois Letexier மற்றும் அவரது நடுவர் குழுவிற்கு எதிராக FIFA-விடம் முறைப்படி புகார் அளித்துள்ளார்.
விசாரணை வேண்டும்
மேலும், தங்கள் அணிக்கு எதிராக அமைந்த சர்ச்சைக்குரிய முடிவுகள் என்று எகிப்து விவரிக்கும் விடயங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த புகார் கோருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
பிரெஞ்சு நடுவர் குழுவை இந்தப் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எகிப்திய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாகக் கோரியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |