நோவக் ஜோகோவிச்சின் விசா மீண்டும் ரத்து
உலகின் நம்பர்1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் ரத்து செய்துள்ளது அவுஸ்திரேலியா.
அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகள் வருகிற 17ம் திகதி தொடங்குகிறது.
இதில் பங்குபெறும் வீரர் மற்றும் வீராங்கனைகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நோவக் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நிலையில், அவுஸ்திரேலியா வந்தார்.
அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததற்கான போதிய மருத்துவ ஆவணங்களை சமர்பிக்க தவறியதால், விசா ரத்து செய்யப்பட்டதாக அவுஸ்திரேலியா அறிவித்தது.
இதனை எதிர்த்து ஜோகோவிச் அங்கேயே தங்கி, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்ற நிலையில், 2வது முறையாக அவருக்கான விசாவை அவுஸ்திரேலிய அரசு ரத்து செய்துள்ளது.
அதாவது, ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், மக்கள் நலன் கருதி விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.