நான்கு ஆண்டுகளுக்கு பிறகு...இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்: உற்சாகத்தில் ரசிகர்கள்!
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்தியாவில் வைத்து நடைப்பெறும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் மாதம் 9ம் திகதி டெல்லியில் தொடங்க உள்ளது.
இதற்காக 18 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது.
இதில் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (துணை கேப்டன்)(Wk), தினேஷ் கார்த்திக் (Wk), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவற்றில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல்-லில் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடி 12 ஆட்டங்களில் அதிரடியாக 274 ஓட்டங்களை தினேஷ் கார்த்திக் குவித்ததால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய படைகளை கதிகலங்க வைத்த உக்ரைன்...அதிரடியான ட்ரோன் தாக்குதல் வீடியோ!
தினேஷ் கார்த்திக் இறுதியாக 2019ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் விளையாடியது குறிப்பிடக்தக்கது.