ரஷ்ய படைகளை கதிகலங்க வைத்த உக்ரைன்...அதிரடியான ட்ரோன் தாக்குதல் வீடியோ!
உக்ரைனில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ட்ரோன் விமானங்களை கொண்டு ரஷ்ய படைகள் மீது உக்ரைன் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் அத்துமீறி நுழைந்து 88வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர், இதில் உக்ரைன் ராணுவத்தின் தீவிரமான தடுப்பு தாக்குதலால் தலைநகர் கீவ்-வை ரஷ்ய படைகள் கைப்பற்ற முடியாமல் பின்வாங்கியதை தொடர்ந்து, தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதியான டான்பாஸில் ரஷ்ய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், உக்ரைனில் அத்துமீறி தாக்குதல் நடத்து வரும் ரஷ்ய படைகள் மீது உக்ரைனின் 45வது தனி பீரங்கி படை, உள்நாட்டில் வடிவமைக்கபட்ட ட்ரோன் கொண்டு துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Battle test drive of Ukrainian-made reconnaissance drone SPECTATOR: minus 1 Russian fuel truck & several armored vehicles taken out by ??Pion heavy artillery
— Euromaidan Press (@EuromaidanPress) May 22, 2022
?️45th Separate Artillery Brigade of Ukraine pic.twitter.com/JAaVfVYGbG
இந்த தாக்குதலில் ரஷ்யாவின் 1 எரிபொருள் டிரக் மற்றும் சில ஆயுதம் தாங்கிய ராணுவ வாகனங்கள் அழிக்கபட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
ரஷ்ய ராணுவத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்திய இந்த ட்ரோன்கள் (UAV complex Spectator) கடந்த 2014ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் போது உக்ரைனுக்கு அதிகமான ட்ரோன் விமானங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்த ட்ரோன் விமானங்களை கீவ் பாலிடெக்னிக் மாணவர்களால் வடிவமைத்துள்ளனர்.
Rodrigo Abd/Associated Press
கூடுதல் செய்திகளுக்கு; சமூக பரவலாக மாறும் குரங்கம்மை: மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!
இவை சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் 30 கிமீ தூரம் வரை பறக்கும் ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.