இந்தியாவின் பணக்கார முதல்வராக உருவெடுத்த டி.கே.சிவகுமார் - விஜய்யின் இடம் என்ன?
கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனையடுத்து, துணை முதல்வராக இருந்த டி.கே.சிவகுமார் வரும் ஜூன் 3 ஆம் திகதி கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இதன் மூலம் இந்தியாவின் பணக்கார முதல்வர் என்ற பெருமையை டி.கே.சிவகுமார் பெற உள்ளார்.
பணக்கார முதல்வராக டி.கே.சிவகுமார்
2023 கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிராமண பத்திரத்தில், தனக்கு ரூ.1,413 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 2018 ஆம் ஆண்டு தனக்கு ரூ.840 கோடியும், 2013 ஆம் ஆண்டில் ரூ.251 கோடியும், 2008 ஆம் ஆண்டில் ரூ.75.5 கோடியும் சொத்து உள்ளதாக தெரிவித்திருந்தார்.
64 வயதான டி.கே.சிவகுமார், 1989 சட்டமன்ற தேர்தல் முதல் தற்போது வரை தொடர்ச்சியாக 8 முறை வெற்றி பெற்றுள்ளார்.

வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
3வது இடத்தில் விஜய்
ரூ.931 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 2வது இடத்தில் உள்ளார். இதில், ரூ.763.93 கோடியை Heritage Foods Limited நிறுவன பங்குகள் மூலம் பெறுகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ரூ.648 கோடி சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.

பணக்கார முதல்வர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களிலும், தென் இந்தியாவை சேர்ந்த முதல்வர்களே உள்ளனர்.
மற்ற தென்னிந்திய மாநிலங்களான தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ரூ30.04 கோடியும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ரூ.27.99 கோடியும், கேரள முதல்வர் சதீசனின் ரூ.3 கோடியும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா ரூ.55 லட்சம் சொத்து மதிப்புடன் கடைசி இடத்தில் உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |