எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி! தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உடல்நலக்குறைவு
கடந்த 18ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். விஜயகாந்திற்கு மார்பு சளி, இருமல் இருந்துள்ளது. இதனால் செயற்கை சுவாசக்கருவி மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார். இதுகுறித்த அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.
நன்றி அறிக்கை
தற்போது தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு விஜயகாந்த் தரப்பில் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 'கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய திரை உலகை சேர்ந்த அனைவருக்கும், அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், தேமுதிக மாவட்ட கழக செயலாளர்களுக்கும், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் அனைவருக்கும், எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்த விஜயகாந்தின் எக்ஸ் பதிவில், 'நான் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, எனக்காக பிராத்தனை செய்து, வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது,
— Vijayakant (@iVijayakant) December 11, 2023
எனக்காக பிரார்த்தனை செய்து , வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். #தேமுதிக pic.twitter.com/riLgUtBOxo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |