தேமுதிக கூட்டணியா... தனித்து போட்டியா? அக்கட்சியின் அவைத்தலைவர் முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுமா அல்லது தனித்து போட்டியிடுமா என்பது குறித்து அக்கட்சியின் அவைத்தலைவர் அறிவத்துள்ளார்.
நேற்று தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அறிவிப்பு வெளியானது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுமா அல்லது தனித்து போட்டியிடுமா என கேள்விகள் எழுந்தன.
அதேசமயம் மக்கள் நீதி மய்யம் தரப்பில் தேமுதிக-வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் தொலைக்கட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்று பேசிய தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன், நாங்கள் எந்த கூட்டணிக்கு போவது இல்லை, தனித்து போட்டியிடுகிறோம் என்ற நிலைமை இன்று எடுத்து இருக்கிறோம்
சத்தியமாக, உறுதியாக,நிச்சயமாக தேமுதிக தனியாக தான் போட்டியிடுகிறது என இளங்கோவன் தெரிவித்தார்.