ஈரானால் அணு ஆயுத மோதல் அபாயம்! மிகப்பெரிய போர் வரக்கூடும் - ரஷ்யா எச்சரிக்கை
மத்திய கிழக்கில் அணு ஆயுத மோதலைத் தூண்டும் அபாயம் உள்ளது என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ஈரான் போர் குறித்து ஜனாதிபதி
ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய மூத்த பாதுகாப்பு அதிகாரியுமான டிமிட்ரி மெத்வெதேவ் (Dmitry Medvedev) அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர், ஈரானை எதிர்த்ததன் மூலம் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரும் மூலோபாய தவறை செய்துவிட்டார்; பிராந்தியத்தின் மிகப்பெரிய போர் இன்னும் வரக்கூடும் என்றார்.
அணு ஆயுத மோதலைத் தூண்டும் அபாயம்
மேலும் பேசிய அவர், "ஈரானுடனான போர் மத்திய கிழக்கில் அணு ஆயுத மோதலைத் தூண்டும் அபாயம் உள்ளது. வளைகுடா நாடுகள் இப்போது தங்களின் சொந்த 'அணு ஆயுதக் கவசத்தை' நாடக்கூடும் என்றும், இது ஒரு பரந்த மோதலுக்கான அபாயத்தை கடுமையாக அதிகரிக்கும்.
துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்கா தொடங்கியுள்ள இந்தத் தூண்டுதலற்ற மிகவும் ஆபத்தான போரின் விளைவாக, அங்கு ஒரு அணு ஆயுத மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகரித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவும், இஸ்ரேலும் சீனக் கடையில் புகுந்த காளையைப் போல நடந்துகொண்டு, பிராந்தியத்தைப் பேரழிவை நோக்கித் தள்ளுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |