ஈழம் குறித்து திமுகவை பெரியளவில் பேச வைக்க முடியும்! நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ராஜீவ்காந்தி பேட்டி
நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு நெருக்கமாக இருந்து தற்போது அக்கட்சியில் இருந்து விலகி திமுகவின் சேர்ந்துள்ள ராஜீவ்காந்தி சில முக்கிய விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.
ராஜீவ்காந்தி அளித்துள்ள பேட்டியில், பா.ஜ.க ஒற்றை ஆட்சியே போதும் என்ற சர்வாதிகாரத்துக்கு வந்து நிற்கிறது. இதனால், என் சமூகநீதி, மதச்சார்பின்மை பறிபோகின்றன.
பாசிச ஆட்சியை நடத்திவருகிற பா.ஜ.க அரசை வீழ்த்துவதற்கு இதுதான் சரியான நேரம். இந்த நேரத்திலும்கூட நான் ஈழப் படுகொலை பற்றியே பேசிக்கொண்டிருக்க முடியாது. அதேசமயம், 2009-ல் உள்ள கோபம் எனக்கு இன்னமும் இருக்கிறது.
அதாவது, இன அழிப்புக்கு எதிராக இன்றைக்கும் பல அமைப்புகளோடு இணைந்து ஒரு வழக்கறிஞராக என் பணியை செய்துகொண்டிருக்கிறேன்.
தனித் தமிழீழம் வேண்டும்' என்ற முடிவில் தி.மு.க-வினர் எப்போதும் உறுதியாகவே நிற்கிறார்கள். ஆக, பெருந்திரளான மக்கள் அமைப்பான தி.மு.க-வை ஒதுக்கிவிட்டு, சிறு குழுவாக இருப்பவர்கள் மட்டுமே ஈழம் குறித்தும், `இனப்படுகொலை குறித்தும் பேசி சாத்தியப்படுத்திவிட முடியாது.
இனிவரும் காலங்களில் ஈழம் குறித்து தி.மு.க-வை மிகப்பெரிய அளவில் பேசவைக்க முடியும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.