தி.மு.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு! ஸ்டாலின்.. உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வெளியானது
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 173 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 6ம் திகதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் நடைபெறவுள்ள நிலையில், இன்று முதல் (மார்ச் 12)- மார்ச் 19ம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பிரதான ஆளும் கட்சியான அதிமுக, 177 தொகுதியில் போட்டியிடும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை பட்டியலை 2 கட்டமாக அறிவித்தது.
இந்நிலையில், இன்று மற்றொரு பிரதான கட்சியான திமுக 173 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன் படி, பெரம்பூர் - ஆர்.டி.சேகர், தி.நகர் - ஜெ.கருணாநிதி, ஆர்.கே.நகர்- ஜே.ஜே.எபினேசர், எழும்பூர் - வழக்கறிஞர் பரந்தாமன், திரு.வி.க நகர் - தாயகம் கவி, விருகம்பாக்கம் - பிராபகர் ராஜா, அண்ணாநகர்- எம்.கே.மோகன், ராயபுரம் - இரா.மூர்த்தி, வில்லிவாக்கம் - வெற்றியழகன், கொளத்தூர்- ஸ்டாலின், சேப்பாக்கம் - உதயநிதி, ஆயிரம்விளக்கு- எழிலன், மயிலாப்பூர்- த.வேலு, துறைமுகம் - சேகர் பாபு, சைதாப்பேட்டை - மா.சுப்ரமணியம், திருவொற்றியூர் - கே.பி.சங்கர், அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
— Sangeetha Kandavel (@sang1983) March 12, 2021
— Sangeetha Kandavel (@sang1983) March 12, 2021
சட்டப்பேரவைத் தேர்தல் 2021: தி.மு.கழக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு! https://t.co/X031mCQw13
— M.K.Stalin (@mkstalin) March 12, 2021