ஈரோடு கிழக்கில் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் திகதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், இன்று வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் நடைபெற்றன.
மொத்தம் 17 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக வேட்பாளர் வி.சி.சந்திர குமார் முன்னிலை வகித்து வந்தார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வி.சி.சந்திர குமார் 1,14,439 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சீதாலட்சுமி 23,810 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இதில், 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். மேலும், இந்த தேர்தலில் டெபாசிட்டை உறுதி செய்வதற்கு மொத்தம் 25,777 வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், நாம் தமிழர் கட்சி 23,810 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்ததால் டெபாசிட்டையும் இழந்துள்ளது. அதேபோல, நோட்டாவுக்கு 5000-க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |