நீண்ட இழுபறிக்கு பிறகு கையெழுத்தானது திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம்! எத்தனை இடங்கள்?
திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம், நீண்ட இழுபறிக்கு இன்று கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் இந்தியன் யூனியம் முஸ்லிம் லீக் (3), மனிதநேய மக்கள் கட்சிக்கு (2), விடுதலை சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டோருக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் மக்கள் நீதி மய்யத்துடன் கைகோர்க்குமா என்றெல்லாம் ஊகங்கள் எழுந்தன.
ஆனால், இந்த ஊகங்களை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழிகிரி மறுத்தார். எனினும், செயற்குழு கூட்டத்தில் அவர் கண்கலங்கிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எவ்வாறாயினும், நீண்ட இழுபறிகு பிறகு இன்று திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஏப்ரல் 6ம் திகதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் மிச்சம் இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிறிய கட்சிகள் மட்டுமே. அதுவும் மார்ச் 8-ம் திகதிக்குள் முடிவுக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது.