உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த திமுக ஐடி விங்
உங்க குடும்பம் எங்கே சார் என முதல்வர் விஜய் குறித்து திமுக ஐடி விங் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
உங்க அப்பாவை காணோம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், ஒரு குட்டி கதை சொல்வதாக கூறி, உங்க அப்பா எங்கே என கேட்டு, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தோல்வியை மறைமுகமாக விமர்சித்தார்.

இதற்கு பதிலடியாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து திமுக ஐடி விங்கும் முதல்வர் விஜய் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
உங்க குடும்பம் எங்கே சார்?
இது தொடர்பாக திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டமன்றம் என்பது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் விவாதிக்கும் மாண்புமிகுந்த இடம். அங்கே மிக மலிவாக, சட்டமன்றத்தின் கண்ணியத்தையே குழிதோண்டிப் புதைத்திருகிறார் இந்த 'இன்ஸ்டா அரசன்'!
எதிர்க்கட்சிகளை நக்கல் செய்கிறேன் பேர்வழி என அடுத்தவர் அப்பாவைத் தேடும் C.M சார், நாங்க நேரடியாகவே உங்களுக்கும் உங்க Virtual Abusersக்கும் புரியும் மொழியிலேயே கேட்கிறோம்,
உங்க குடும்பம் எங்கே சார்? அவர்களை ஏன் இப்படி நடுத்தெருவில் கைவிட்டீர்கள்?
உங்கள் சொந்தப் பிள்ளைகளின் நண்பர்கள் இன்று, "உங்க அப்பா எங்கடா?" என்று கேட்டால், அந்தப் பிள்ளைகள் என்ன பதில் சொல்வார்கள் என உங்களுக்கு என்றாவது உறைத்திருக்கிறதா?
உங்களது சொந்த மனைவியே, "என் கணவன் இன்னொரு நடிகையோடு தொடர்பில் இருக்கிறார்" என்று கூறி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்கும் அளவுக்குக் கேவலமான நிலையில் உங்களது தனிமனித வாழ்க்கை இருக்கிறதே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
இப்படிப்பட்ட அசிங்கமான பின்னணியை வைத்துக் கொண்டு, எந்த முகத்தோடு சட்டமன்றத்தில் நின்று அடுத்தவர்கள் குடும்பத்தைப் பற்றிக் குட்டிக்கதை சொல்கிறீர்கள்?
சட்டமன்றம் என்பது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் விவாதிக்கும் மாண்புமிகுந்த இடம். அங்கே மிக மலிவாக, சட்டமன்றத்தின் கண்ணியத்தையே குழிதோண்டிப் புதைத்திருகிறார் இந்த 'இன்ஸ்டா அரசன்'!
— DMK IT WING (@DMKITwing) June 23, 2026
எதிர்க்கட்சிகளை நக்கல் செய்கிறேன் பேர்வழி என அடுத்தவர் அப்பாவைத் தேடும் C.M சார், நாங்க… pic.twitter.com/8bcLwzLYuL
மேடைக்கு மேடை 'தனிமனித ஒழுக்கம்' என்று ஊருக்கு உபதேசம் செய்யும் 'சோஃபா மாடல்' முதலமைச்சரே, முதலில் உங்கறது சொந்தக் குடும்பத்தின் வண்டவாளங்களைச் சரிசெய்துவிட்டு, அப்புறம் சட்டமன்றத்தில் வந்து வாய் கிழியப் பேசுங்கள்!" என பதிவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் இரு கட்சியினை சேர்ந்தவர்களும் இது குறித்து மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |