முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றிகள்! ஜாமீனில் வெளியே வந்தார் செந்தில் பாலாஜி
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
471 நாட்கள் சிறைவாசம்
கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அவர் மீது 2016-ம் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்து நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 14 -ஆம் திகதி விசாரணைக்கு பிறகு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி
கைது பிறகு, செந்தில் பாலாஜி பலமுறை ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தும், அவருக்கான ஜாமீன் மனு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் காலை 10.30 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, இன்று மாலை சென்னை மத்திய புழல் சிறையில் இருந்து கிட்டத்தட்ட 471 நாட்களுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
அவருக்கு திமுகவினர் பட்டாசுகள் வெடித்து அமோகமான வரவேற்பு வழங்கி வருகின்றனர்.
செந்தில் பாலாஜி பேட்டி
என் மீது அன்பும், நம்பிக்கையும், பாசமும் வைத்திருந்த கழக தலைவர் முதலமைச்சருக்கு வாழ்நாள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது போடப்பட்ட இந்த பொய் வழக்கில் இருந்து சட்டப் போராட்டம் நடத்தி மீண்டு வருவேன் என்றும் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |