ராஜபக்ஷேவை போல் முதல்வர் விஜய்யை மக்கள் ஓடவிடுவார்கள் - திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு
dmk mla markandeyan says people throw away cm vijay like rajapaksa: ராஜபக்ஷேவை போல் முதல்வர் விஜய்யை மக்கள் ஓடவிடுவார்கள் என திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
விஜய்யை மக்கள் ஓடவிடுவார்கள்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் செய்தியாளர்களை சந்தித்த பேசினார்.
இதில் பேசிய அவர், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா அல்லது தன்னிச்சையாக நடத்துகின்ற அரசா என்று தெரியவில்லை.

விளாத்திகுளம் பகுதியில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ எந்தத் தகவலும் முறையாகத் தெரிவிக்கவில்லை.
தொகுதியில் உள்ள குறைகள் குறித்தும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விகளுக்கு அச்சப்பட்டு ஆய்வுக் கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை.
ஆய்வுக் கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் விதி. மக்கள் தங்களது குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கும், நிறைகளைப் பெறுவதற்கும்தான் மக்கள் பிரதிநிதியாக என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
கந்த சஷ்டி சூரசம்ஹாரத்தின்போது, முதல்வருக்கு அரோகரா என்று கூறுகின்றனர்.முதல்வருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் என்ன அரோகரா தேவை இருக்கிறது? இவர்களுக்கு அரோகரா பற்றி தெரியுமா?
பள்ளிக் குழந்தைகளுக்கு கேக், இங்கு என்ன உணவுப் பஞ்சமா இருக்கிறது? நாட்டில் என்ன பிரச்சினை இருக்கிறது? அவங்கவங்க அழகாகப் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது, குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் சொன்னால் அவர்களே கேக்கினை ஸ்பான்சர் செய்து வழங்கப் போகிறார்கள். இந்தக் கேக் வழங்க எவ்வளவு கோடி செலவிடப்பட்டுள்ளது?
வைகோ ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர். அவரை போன்று ஒரு அரசியல் 420யை பார்க்க முடியாது. அரசியல் மனநோயாளி வைகோ.
இந்த ஆட்சியில் அமைச்சர்கள் எல்லாம் முட்டாள்தனமான பதில்களைச் சொல்கிறார்கள், மூடர்களைப் போல் பேசுகிறார்கள். தவெக அமைச்சர்கள் தரங்கெட்ட அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள். அரசியலுக்கே அவமானமானவர்கள் மாதிரி இருக்கிறார்கள்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன மாதிரி புரட்சி வரும். நீங்கள் இன்னும் 3 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தால் மக்கள் பின்னங்கால் பிடரியில் அடித்து ஓடுகிற அளவிற்கு பெரிய புரட்சி வரும். ராஜபக்சேவை ஓடவிட்ட மாதிரி ஜோசப் விஜய்யை மக்கள் ஓடவிடுவார்கள்" என தெரிவித்துள்ளார்.