திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு தடை! இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரில் திமுக எம்.பி ஆ.ராசா 48 மணி நேரத்திற்கு பரப்புரை மேற்கொள்ள தடை விதிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஆ.ராசா, அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை, எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை என குறிப்பிட்டார்.
ஆ.ராசாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆ.ராசா மீது கலகம் செய்ய தூண்டுதல், ஆபாசமாக பேசுதல், தேர்தல் விதிமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேசமயம் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் ஆ.ராசா
இதனையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்பட்டதற்காக ஆ.ராசாவை கண்டிப்பதாகவும், உடனடியாடிக திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ.ராசா நீக்கப்படுவதாகவும் மற்றும் 48 மணி நேரம் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், எதிர்காலத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது பெண்கள் கண்ணியத்தை குறைக்கும் வகையில் அவதூறாக பேசக்கூடாது என்பதில் கவனமாக இருக்குமாறு ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
