இது வலதுசாரி பிரச்சாரத்தின் புத்திசாலித்தனம்.., இந்தி குறித்த ஸ்ரீதர் வேம்பு கருத்துக்கு திமுக பதில்
தமிழகத்தில் தொழில் முனைவோர் மற்றும் பொறியாளர்கள் தொழில் முன்னேற்றத்திற்காக இந்தி கற்க வேண்டும் என்ற ஸ்ரீதர் வேம்பு கருத்துக்கு திமுக பதில் தெரிவித்துள்ளது.
திமுக பதிலடி
இந்தி குறித்த ஸ்ரீதர் வேம்பு கருத்துக்கு திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "இதுதான் வலதுசாரி பிரச்சாரத்தின் புத்திசாலித்தனம். இந்தி படிப்பது ஒரு சிறப்புரிமை என்றும் அதைப் படிக்கும் குழந்தைகளுக்கு இது பல நன்மைகளைத் தரும் என்றும் அவர்கள் சித்தரிக்க விரும்புகிறார்கள்.
ஆனால், இந்தியை கட்டாயமாக்குவதால் மாணவர்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது, மாறாக அது அவர்களுக்கு சுமையாக தான் இருக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள மக்கள் பல்வேறு காரணங்களுக்காக சிபிஎஸ்இ பள்ளிகளைத் தேர்வு செய்கிறார்கள். பள்ளியின் இடம், கட்டண அமைப்பு, குறிப்பிட்ட பள்ளியில் ஆசிரியர்களின் தரம், கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் போன்றவை.
தமிழகக் கல்வித் துறையுடன் இணைந்த அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்காக கலைஞர் அறிமுகப்படுத்திய “சமச்சீர் கல்வி” திட்டத்தை ஜெயலலிதாவின் அதிமுக அரசு அதை நிராகரித்தது.
இதன் காரணமாக தமிழ்நாடு பாடக் கல்வித் திட்டம் தரம் தாழ்ந்தது என்ற கண்ணோட்டம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது. இது சிபிஎஸ்இ பள்ளிகளின் பெருக்கத்திற்கு வழிவகுத்தது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, "இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்வதில் புத்திசாலியாக இருப்பார்கள். அரசியலைப் புறக்கணிப்போம், மொழியைக் கற்போம்! இந்தி கற்றுக் கொள்வோம்" என்று கூறிஇருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |