கொலைக் குற்றத்தில் என் தம்பியை மாட்டிவிட்டுவிடுவேன்... இளம்பெண் சொல்வதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய செய்தி
நான் ஏதாவது கொலைக் குற்றத்தில் சிக்கி, அந்த இடத்தில் என் இரத்தம் சிந்தினால், எனக்கு பதில் என் தம்பி பொலிசிடம் சிக்கிக்கொள்வான் என்று கூறி சிரிக்கிறார் அனன்யா (24).
சிரிப்பின் பின்னால் ஒரு சோகம்
2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், அமெரிக்காவின் டெக்சாஸில் வாழும் அனன்யாவுக்கு திடீரென காய்ச்சல் வந்தது, கூடவே அவரது கண் பார்வையும் பாதிக்கப்பட, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு ஒருவகை இரத்தப்புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Credit: SWNS
கடுமையான கீமோதெரபி, இம்யூனோதெரபி சிகிச்சைகளுக்குப் பின் சற்று உடல் நலம் தேறினார் அனன்யா. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, 2022ஆம் ஆண்டு, மார்ச் மாதம், மீண்டும் புற்றுநோய் பரவது துவங்கியது.
கடைசியாக எலும்பு மஜ்ஜை (bone marrow transplant) தானம் மட்டுமே ஒரே வழி என மருத்துவர்கள் கூறிவிட, தன் அக்காவுக்கு எலும்பு மஜ்ஜை தானம் செய்ய முன்வந்தார் அவரது தம்பி சைதன்யா பாஷ்யம் (21).
Credit: SWNS
வேடிக்கையாக பேசும் அக்கா
ஆக, சைதன்யா, அனன்யாவுக்கு எலும்பு மஜ்ஜை தானம் செய்ய, அவர் உடல் நலம் தேறியுள்ளார். தன் உடலில் தனது மற்றும் தன் தம்பியின் DNA இருப்பதால்தான், தான் எங்காவது குற்றச்செயலில் ஈடுபட்டால், அங்கு தன் இரத்தம் சிந்தினால், தன் உடலில் தன் தம்பியின் DNA இருப்பதால், தனக்கு பதில், அவன் மாட்டிக்கொள்வான் என தம்பியை கேலி செய்கிறார் அனன்யா.
Credit: SWNS
எலும்பு மஜ்ஜை தானத்துக்குப் பின் தாங்கள் இருவரும் இன்னும் நெருக்கமாகிவிட்டதாகக் கூறும் சைதன்யா, இப்போது தாங்கள் இருவரும், அக்கா தம்பி மட்டுமல்ல, நெருங்கிய நண்பர்கள் என்கிறார்.
Credit: SWNS
அக்கா தன்னை மாட்டிவிட்டுவிடுவதாகச் சொல்வது வேடிக்கையாக இருப்பதாகக் கூறி சிரிக்கும் சைதன்யா, உண்மையில் அப்படியெல்லாம் நடக்காது. ஏனென்றால், அக்கா சட்டத்தை மதித்து நடப்பவர் என்கிறார் சிரித்துக்கொண்டே.
Credit: SWNS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |