நாட்டு மக்களுக்காக உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட பரபரப்பு வீடியோ
உக்ரைன் தலைநகரில் ரஷ்ய படைகள் சரமாரி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டள்ளார்.
உக்ரைன் மீது 3வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தலைநகர் kyiv-ல் நுழைந்து அடுக்குமாடி குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
2வது நாள் வரை சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீரர்களை ரஷ்யா இழந்ததாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளிடம் சரணடைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதேசமயம், உக்ரைனில் இராணுவ ஆட்சி அமுலுக்கு வர வேண்டும் எனவும், அப்படி நடந்தால் பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக இருக்கும் என ரஷ்யா அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
இந்நிலைியல், தலைநகர் kyiv-ல் இருந்து படி உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, வீடியோ வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், உக்ரைன் இராணுவம் சரணடைந்துவிட்டதாக பரவும் பெய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார்.
Не вірте фейкам. pic.twitter.com/wiLqmCuz1p
— Володимир Зеленський (@ZelenskyyUa) February 26, 2022
மேலும், நான் இங்கே (Kyiv) தான் இருக்கிறேன். நாங்கள் ஆயுதங்களை கைவிட போவதில்லை. நமது நாட்டை நாங்கள் பாதுகாப்போம் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.