வெள்ளைப்படுதல் தீவிரமாக இருக்கும் போது செய்ய கூடாத செயல்கள் என்ன? பெண்களே கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Amenorrhoea
By Kishanthini
பொதுவாக வெள்ளைப்படுதல் என்பது பெண் உறுப்பை தொற்று இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க உதவும் ஒரு திரவம்.
இது இயற்கையானது ஆனால் தீவிரமாகும் போது அல்லது இந்த திரவத்தில் தென்படும் வித்தியாசமானது சில நோய்களின் அறிகுறிகளை கொண்டு வர செய்யலாம்.
வெள்ளைப்படுதல் உங்கள் வயது மற்றும் மாதவிடாய் சுழற்சி போன்றவற்றை பொறுத்தும் அதன் நிறம், அளவு வேறுபடலாம் .அவற்றை ஆரம்பத்திலே கவனிப்பது நல்லது.
அந்தவகையில் அதிக வெள்ளைப்படுதலுடன் போது செய்யக்கூடாதா செயல்கள் என்ன? இவற்றை எப்படி தடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
செய்யக்கூடாதாதை
- முட்டை, இறைச்சி, பிரெட், மஷ்ரூம், இனிப்புகள் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.
- டியோடரன்ட் போடுவது, ஸ்பிரே பயன்படுத்துவது, சிந்தடிக் உள்ளாடை அணிவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அது எரிச்சலை ஏற்படுத்தும்.
- பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்துவதை கூட தவிர்க்க வேண்டும்.
- பிறப்புறுப்பில் ஈரம் சேராமல் பார்த்துக் கொள்ளவும். அவ்வப்போது வியர்த்தால் துடைத்து விட வேண்டும்.
- டியோடரன்ட் பேட் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்பட்டால் சொரியக் கூடாது.
எப்படி தடுப்பது?
- அதிக அளவில் பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவது நல்லது. வாழைப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சம் பழம், கருப்பு பிளம்ஸ், வெண்டைக்காய், பச்சைக் கீரைகள், வெங்காயம், பிரவுன் அரிசி, யோகர்ட் உள்ளிட்டவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
- இஞ்சி, பூண்டு, வெந்தயம், கொத்துமல்லி போன்ற மசாலா வகைகளையும் தவறாமல் சேர்க்க வேண்டும்.
- உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தினசரி போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும்.
- தினமும் லேசான உடற்பயிற்சி தினசரி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வாக்கிங், ஜாகிங், தியானம் போன்றவை.
- யோகா செய்வது மிகவும் நல்லது. குறிப்பாக பர்வதாசனா, தனுராசனா, புஜங்காசனா, பத்ராசானா ஆகியவற்றை செய்யலாம். மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.
குறிப்பு
வெள்ளைப்படுதல் நிறம் மாறி துர்நாற்றத்துடன் வெளியேற்றம் இருந்தால் அலட்சியம் வேண்டாம் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US