பிசுபிசுக்கும் பிரான்ஸ் வேலைநிறுத்தம்?: மார்ச் 7ஆம் திகதி பெரும் எதிர்பார்ப்பு
எதிர்பார்த்ததைவிட வேலைநிறுத்தம் தொடர்பான பேரணிகளில் குறைவான பணியாளர்களே கலந்துகொண்டதால் பிரான்ஸ் வேலைநிறுத்தம் பிசுபிசுத்துப்போனதாக கருதப்படுகிறது
எதிர்பார்த்ததைவிட குறைவான பணியாளர்கள்
பிரான்ஸ் முழுவதும் ஓய்வூதிய வயதை உயர்த்தும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அரசின் திட்டத்தை எதித்து பேரணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் ஊழியர்கள்.
ஆனால், வேலைநிறுத்தத்தின் ஐந்தாவது நாளில் (பிப்ரவரி 16) எதிர்பார்த்ததைவிட குறைவான பணியாளர்களே பேரணிகளில் பங்கேற்றார்கள்.
மார்ச் 7ஆம் திகதி பெரும் எதிர்பார்ப்பு
ஆனால், அடுத்த மாதம், அதாவது மார்ச் 7ஆம் திகதியை இலக்காக வைத்துள்ள தொழிலாளர் யூனியன்கள், அன்று பிரான்சை ஸ்தம்பிக்கவைக்க இருப்பதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளன.
வியாழக்கிழமை அன்று 440,000 பேர் மட்டுமே பேரணிகளில் பங்கேற்றதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.