உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்! சிறுநீரக நோயாக கூட இருக்கலாம்

Health Kidney decease
By Balakumar Jan 07, 2021 05:51 PM GMT
Report

நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பல வகைகளில் துணைபுரிவது நம் சிறுநீரகம் தான்.

ஆனால் இன்றையகாலத்தில் பலர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

அதிலும் சிலருக்கு பலர் தங்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு அடைந்துள்ளது என்பதையே அறியாமல் இருக்கிறார்கள்.

நோய் முதிர்ச்சியடையும் நிலையில்தான் அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். இதை, வளரவிடக் கூடாது. அப்படி வளர்ந்தால் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல பெரிய சிகிச்சைகளைச் செய்ய வேண்டி வரும்.

அதோடு முன்கூட்டியே ஒருவர் சிறுநீரக நோயை கண்டறிந்துவிட்டால், எளிதில் அவற்றை குணமாக்கவும் முடியும்.

ஆகவே ஒருவர் சிறுநீரக நோயின் ஆரம்ப கால அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அந்தவகையில் தற்போது சிறுநீரக நோயைச் சுட்டிக்காட்டக்கூடிய சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளைக் என்ன என்பதை பார்ப்போம்.

  1. நீங்கள் எந்நேரமும் சோர்வுடன் இருப்பதை உணர்ந்தால், அது சிறுநீரக நோயின் அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால், அது எரித்ரோபொய்டின் என்னும் ஹார்மோனை உருவாக்குகின்றன. சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருந்தால், இந்த ஹார்மோன்கள் குறைவாக சுரக்கப்படும். இதனால் உடலுறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்களின் அளவு குறைந்து, விரைவில் சோர்வடையச் செய்யும்.
  2. மற்றவர்கள் மிகவும் வெதுவெதுப்பான சூழலை உணரும் போது, நீங்கள் மட்டும் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்தால், அது சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைக்கான அறிகுறிகளுள் ஒன்று.
  3. மூச்சுத் திணறல் இரண்டு வழிகளில் சிறுநீரகங்களுடன் தொடர்புடையது. முதலில், நுரையீரலில் அதிகளவிலான திரவம் தேங்கியிருப்பது. மற்றொன்று உடலில் ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்களின் அளவு குறைவாக இருப்பது. இதன் விளைவாகவே சிறுநீரக நோய் உள்ளவர்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்கிறார்கள்.
  4. இரத்த சோகை தொடர்பான சிறுநீரக செயலிழப்பு என்றால் போதுமான ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்கள் மூளைக்கு கிடைப்பதில்லை என்று அர்த்தம். இதன் விளைவாக இது தலைச்சுற்றல், மயக்கம் அல்லது பலவீனத்திற்கு வழிவகுக்கிறது.
  5. எப்போது சிறுநீரங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகளை பிரித்து எடுக்கும் செயலை சரிவர செய்யாமல் இருக்கிறதோ, அப்போது இரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, கடுமையான சரும அரிப்பை உண்டாக்குகின்றன.
  6. சிறுநீரகங்கள் உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றாத பட்சத்தில், உடலில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு, அதன் விளைவாக கால்கள், கணுக்கால், பாதம் மற்றும் கைகள் வீக்கமடைந்து காணப்படும்.
  7. பொதுவாக சிறுநீரகங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றாமல் இருந்தால், அது உடலில் கெட்ட நீரை தேங்கச் செய்து, முகம் வீங்கி காண வழிவகுக்கும். எனவே இம்மாதிரியான பிரச்சனையை சந்திக்கும் போது கவனமாக இருங்கள்.
  8. உங்கள் வாய் கடுமையான துர்நாற்றத்துடன் இருந்தால் அப்படியானால் சிறுநீரகங்களில் உள்ள பிரச்சனையால், அவை இரத்தத்தில் உள்ள நச்சுக்களை சரியாக வெளியேற்றாமல் இருக்கிறது என்று அர்த்தம்.
  9. சிறுநீர் கழிக்கும் அளவு மற்றும் சிறுநீர் கழிக்கும் முறையில் மாற்றத்தைக் கண்டால், அதுவே சிறுநீரக நோயின் முதல் அறிகுறியாகும். சிலர் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வார்கள் ஆனால் சிறுநீர் கழிக்கும் போது சிரமத்தை சந்திப்பார்கள். அதோடு சிறுநீர் அடர் நிறத்தில், இரத்தம் கலந்து, வலி அல்லது எரிச்சலுடன் சிறுநீரைக் கழிக்கக்கூடும்.
  10. சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக தொற்றுக்கள் இருந்தால் கீழ் முதுகு பகுதி மற்றும் அடிவயிற்றின் இரண்டு புறத்திலும் வலியை சந்திக்கக்கூடும். சிறுநீர் குழாயில் கற்கள் இருந்தால், முதுகு வலி ஆரம்பித்து அது அப்படியே இடுப்பு பகுதியிலும் வலியை பரப்பக்கூடும்.
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US