மக்கள் அதிகம் பயன்படுத்துவது திரெட்ஸா, ட்விட்டரா? வெளியான தகவல்
தொடக்கத்தில் அதிக பயன்பாட்டை பெற்ற திரெட்ஸ், தற்போது அதன் பயன்பாடு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடகடவென உயர்ந்த திரெட்ஸ் பயனர்
இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, ட்விட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் என்ற புதிய செயலியை ஜுலை 6 ஆம் திகதி அறிமுகம் செய்தது.
திரெட்ஸ் செயலி அறிமுகமான இரண்டு நாள்களில் 7 கோடி பேர் ஆர்வமாய் அதில் இணைந்தனர். பின்பு 5 நாள்களில் 10 கோடி பேர் திரெட்ஸில் இணைந்தனர். தற்போது, திரெட்ஸில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை 15 கோடிக்கும் மேல் உள்ளது.
மற்ற சமூக வலைத்தளங்களை ஒப்பிடுகையில் திரெட்ஸ் ஆனது மக்களை அதிகமாக சென்றடைந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆய்வு கூறுவது என்ன?
இந்நிலையில், திரெட்ஸின் பயன்பாடு படிப்படியாக குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கடந்த ஜூலை 18 முதல் 22 ஆம் திகதி வரை திரெட்ஸின் பயன்பாடு குறைந்துள்ளதாக செயற்கை நுண்ணறிவு நிறுவனமான சென்சார் டவர் கூறியுள்ளது.
அதாவது, ஜூலை 6 ஆம் திகதியை ஒப்பிடுகையில் ஜூலை 18 ஆம் திகதி திரெட்ஸின் பயன்பாட்டு சராசரி நேரம் மற்றும் பயனர்களின் எண்ணிக்கை 75 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக கூறியுள்ளது.
மேலும், ஜூலை 07 ஆம் திகதியை ஒப்பிடும் போது திரெட்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்வது 22 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்சார் டவர் நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, ஜூலை 18 ஆம் திகதி 9.5 கோடி பேர் திரெட்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
அதில், அதிக பயனர்கள் கொண்ட முதல் 5 நாடுகள் வரிசையில், இந்தியா 28 சதவீதமும், அமெரிக்க 13 சதவீதமும் , பிரேசில் 13 சதவீதமும் , மெக்சிகோ 5 சதவீதமும் , ஜப்பான் 4 சதவீதமும் ஆக உள்ளது.
அதுமட்டுமில்லாமல், ட்விட்டரின் பயன்பாடு திரெட்ஸ் செயலியால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக ட்விட்டரின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |