நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இந்த ஆசனத்தை செய்திடுங்கள்
நுரையீரலுக்கு ஏற்படும் அழுத்தத்தில் இருந்து அதனை பாதுகாத்து ஆரோக்கியமாக செயல்படுவதற்கு தனுராசனத்தை தொடர்ந்து செய்து வரலாம்.
எப்படி செய்ய வேண்டும்?
நமது உடலை எவ்வாறு வில் போன்று வளைப்பது என்று கவலைப்பட தேவையில்லை. மிகவும் எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானதாகும்.
ஒரு நல்ல விரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். பிறகு நீங்கள் உங்களது வயிறு தரையில் தொட்டு இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
உங்களது இரண்டு கால்களையும் பின்னோக்கி மடக்க வேண்டும். அப்பொழுது உங்களது இரண்டு கைகளையும் கொண்டு இரண்டு கால்களையும் கட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டியதுதான்.
அப்பொழுது உங்கள் தலையானது மேல் நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொண்டு சீரான சுவாசத்தை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு மேற்கொள்ளும் பொழுது உங்களது நுரையீரல் சரியாக வேலை செய்ய துவங்கும், பின் சிறிது நேரத்தில் நீங்கள் பழைய நிலைக்கு திரும்பி வந்துவிட வேண்டியதுதான்.
கவனம் செலுத்த வேண்டிய இடங்கள்
அடி வயிறு, தொடைகள், முதுகுத்தசை மற்றும் மூச்சின் மீதும் விசுத்தி, அனாஹதம் அல்லது மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
யாரெல்லாம் செய்யக்கூடாது?
உயர் ரத்த அழுத்தம், குடல் பிதுக்கம், வயிறு, குடல் புண், இருதய பலகீனம், குடல் வீக்கம், விரை வாதம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.