உங்களுக்கு முடி நிறைய கொட்டுவதை தடுக்க வேண்டுமா? இந்த இலையை இப்படி பயன்படுத்துங்க போதும்
இன்றைய வாழ்வியல் முறை நமக்கு தந்திருக்கும் பாதிப்புகளில் முக்கியமான ஒன்று முடி உதிர்வு.
முடி உதிர்வைத் தடுக்க முடி மாற்று சிகிச்சை, ஸ்பாவுக்குச் செல்லுதல், ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்வது எனப் பலரும் பல வழிகளைக் கையாளுகிறார்கள்.
இது சில நேரம் பக்கவிளைவுகளையே ஏற்படும். எவ்விதபக்கவிளைவுகளுமின்றி முடி உதிர்வை தடுக்க ஒரு எளியவழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- வெற்றிலை - 5 முதல் 10 வரை ( தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப அதிகரித்து கொள்ளலாம்)
- நெய் - 2 முதல் 3 டீஸ்பூன்
- தேன் - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
வெற்றிலையை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்துக் கொள்ளவும்.
பின் அந்த கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்ற வேண்டும். அதனுடன் நெய் மற்றும் தேன் சேர்த்து அக்கலவை கெட்டியான பேஸ்ட் ஆக மாறும் வரை நன்கு கிளறவும்.
பின்னர் ஹேர் பிரஷ் கொண்டு உச்சந்தலை தொடங்கி முடிகளில் தடவிக் கொள்ளவும்.
இதனையடுத்து 4-5 நிமிடங்களுக்கு முடியில் மசாஜ் செய்து ஹேர் மாஸ்க் முடியின் வேர்க்கால்கள் வரை நன்கு பரவும்படி அப்ளை செய்ய வேண்டும்.
அரைமணி நேரம் அப்படியே காயவிட்டு பின் வெதுவெதுப்பான நீரில் லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு தலைமுடியை அலசவும்.
பயன்கள்
- உச்சந்தலையில் எரிச்சலைத் தணித்து ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.
- முனைகள் பிளவுபடுவதைத் தடுத்து பொலிவை அதிகரிக்கிறது.
- இதனுடன் செய்யப்படும் வெற்றிலை ஹேர் மாஸ்க் முடி வறண்டு போவதை தடுத்து வளர்ச்சியை கொடுக்கிறது.
-
மேலும் வெற்றிலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முடியில் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கும்.