முடி உதிர்வு பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்
பொதுவாக தலைமுடி உதிர்வதற்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் தலைமுடிக்கு கிடைக்காமல் இருப்பதும் முக்கிய காரணம் ஆகும். இன்றைக்கு பலரும் இதனால் அவஸ்தைப்படுவதுண்டு.
தலைமுடி உதிர்வதை நிறுத்தி, முடியின் அடர்த்தியை அதிகரிக்க பல்வேறு பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களால் தலைமுடிக்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், முடி உதிர்வது நிற்பதோடு, முடியும் அடர்த்தியாகும்.
இப்போது முடி உதிர்வை தடுத்து முடியை அடர்த்தியாக வளர செய்ய என்னென்ன செய்யலாம். என்பதை இங்கே பார்ப்போம்.
- ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர், இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் மூன்று முட்டைகளின் வெள்ளைக்கரு கலந்து தலைமுடியில் தேய்க்கவும். பின்பு பிளாஸ்டிக் ராப் அல்லது ஷவர் கேப் பை கொண்டு தலையை மூடி அரை மணி நேரம் ஊறவிடவும். பின்பு ஷாம்பு போட்டு தலைமுடியை அலசி விடலாம்.
- இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். தலையில் எண்ணெய் தேய்ப்பது போல் தண்ணீரை லேசாக தடவவும். பின்பு முட்டை கலவையை கூந்தலில் தடவிவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து குளித்துவிடலாம். முட்டையில் இருக்கும் புரதம் தலைமுடியை கடினமாக்கும் தன்மை கொண்டது என்பதால் மாதம் ஒருமுறை மட்டும் பயன்படுத்துவது நல்லது.
- நன்கு பழுத்த அவகோடா பழத்துடன் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து ஈரமான தலைமுடியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை தண்ணீரில் அலசிவிடலாம். இந்த கலவையை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம். ஆரோக்கியமான கூந்தல் கொண்டவர்கள் மாதம் ஒரு முறை உபயோகிக்கலாம்.
- ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி தலையில் தடவி விடவும். பின்பு 'ஷவர் கேப்' கொண்டு தலையை மூடிவிடவும். முக்கால் மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைமுடியை அலசி விடலாம். வறண்ட கூந்தல் கொண்டவர்கள் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது.
- கற்றாழையில் இருந்து ஜெல் எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலக்கவும். இந்த கலவையை கூந்தலில் தடவிவிட்டு 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அலசி விடலாம்.
- ஆலிவ் எண்ணெய், சந்தன எண்ணெய் இரண்டையும் சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் நன்றாக தேய்க்கவும். பின்பு தலைமுடியின் நுனியில் லேசாக தடவவும். தலைமுடி சேதம் அடைவதை தடுப்பதற்கு சந்தன எண்ணெய் உதவும்.
- வாழைப்பழங்கள், 2 டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் 4 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலைமுடியில் தடவவும். அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசி விடலாம். வாழைப்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் சிலிகா முடி வளர்ச்சியை தூண்டிவிடும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.