உங்களுக்கு கை, காலில் அதிகமாக முடி இருக்கா ? இதனை எளிதில் அகற்ற இதோ சில சூப்பர் டிப்ஸ்
பொதுவாக பல பெண்கள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை தான் கை, கால், முகத்தில் அசிங்கமாக முடி இருப்பது.
பெண்களுக்கு கை, கால் மற்றும் முகத்தில் முடி வளர்வதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், முறையற்ற மாதவிடாய் சுழற்சி, குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
கை, கால், முகத்தில் இருக்கும் முடியை நீக்குவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் இயற்கை வழிகளே சிறந்தது. தற்போது அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
Image -istockphoto
- டேபிள் ஸ்பூன் சர்க்கரை, தேன் , 1 ஸ்பூன் எலுமிச்சை என எடுத்துக்கொண்டு அடுப்பில் வைத்து 3 நிமிடங்களுக்குக் காய்ச்சி எடுங்கள். பின் அது ஆறியதும் கம் போல் ஒட்டும் அதை கை, கால்களில் தடவி காய்ந்ததும் முடிகளின் எதிர் திசையில் இழுக்க அகன்றுவிடும்.
- ஓட்ஸ் மற்றும் பழுத்த பழம் இரண்டையும் நன்குக் கலந்து முடி உள்ள இடத்தில் தடவி 15 மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். முடிகள் அகன்றுவிடும்.
-
உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் மூன்றையும் கலந்து முடிகள் உள்ள இடத்தில் 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய அகன்றுவிடும்.
-
முட்டை மற்றும் சோள மாவை கலந்து தேவையற்ற முடிகள் இருக்கும் இடத்தில் தடவி காய்ந்ததும் எடுத்தால் வந்துவிடும்.
- நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1-2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து கலந்து, தேவையற்ற முடி வளர்ந்துள்ள பகுதிகளில் தடவி மென்மையாக தேய்த்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வர, முடியின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
- பப்பாளியின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, அரைத்துக் கொள்ள வேண்டும். பின் 2 டேபிள் ஸ்பூன் பப்பாளி பேஸ்ட்டுடன், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகம், கை, கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை மேற்கொள்ள வேண்டும்.
- 1/2 கப் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் பிரஷ் க்ரீம் மற்றும் 1/2 கப் பால் சேர்த்து கலந்து, முடியுள்ள கை, கால், முகப் பகுதிகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பேஸ்ட் நன்கு காய்ந்த பின் நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்ய நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.