ஒரு படத்திற்கு இசையமைக்க அனிருத் வாங்கும் சம்பளம்.., எத்தனை கோடிகள் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத் ரவிச்சந்தர்.
இசையமைப்பாளர் அனிருத் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தற்போது விஜய், ரஜினி, கமல் என அனைவரும் தனது படங்களுக்கு அனிருத் இசையமைப்பதையே விரும்புகிறார்கள்.
சமீபத்தில் வெளியான லியோ, விக்ரம், ஜெயிலர், வேட்டையன், ஜவான் என அனைத்து வெற்றி படங்களிலும் அனிருத் முக்கிய ஒருவராக இருந்துள்ளார்.
அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ள சூப்பர் ஸ்டார் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
அனிருத் இதுவரை இரண்டு பிலிம்பேர் விருதுகள், 9 SIIMA விருதுகள், 6 எடிசன் விருதுகள் மற்றும் 5 விஜய் விருதுகள் ஆகியவற்றை வென்றுள்ளார்.
மேலும் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறார்.
அந்தவகையில், தற்போது ஒரு படத்திற்கு இசையமைக்க அனிருத் ரூ. 10 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
ஆஸ்கார் விருது பெற்ற ஏஆர் ரஹ்மான் ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |