வெள்ளை சாதம் சாப்பிட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து தெரியுமா?
வெள்ளை சாதம் சாப்பிட்டால் உடலுக்கு தெம்பு ஏற்பட்டு பல நன்மைகளும் கிடைக்கும்.
ஆனால் வெள்ளை சாதம் அதிகமாக சாப்பிடுவதால் உடலுக்கு தீமைகளை அது விளைவிக்கும்
வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
எனவே சாதம் சாப்பிட ஆசை வந்தால் கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்தை சாப்பிடுங்கள்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும், வெள்ளை சாதத்தை அளவோடு சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
வெள்ளை சாதத்தில் நார்ச்சத்துக்களானது மிகவும் குறைவாக இருப்பதால், அவை முறையற்ற குடலியக்கத்தை ஏற்படுத்தி விடும்.
உடல் எடையை குறைக்க வேண்டுமானால், குறைந்தது ஒரு மாதத்திற்கு வெள்ளை சாதத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
ஏனெனில் வெள்ளை சாதத்தில் அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளதால், உடலின் எடையானது இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும்.