உங்கள் உணவில் 1 கிராம் உப்பை குறைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
உப்பின் பயன்பாடு உலகளவில் பரவலாக இருக்கிறது.
ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளாக உப்பு உள்ளது. ஆனால் இதனை அதிகளவு பயன்படுத்து ஆபத்தையே தரும்.
குறிப்பாக சமையலில் உப்பை அதிகம் உபயோகிப்பது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச் செய்துவிடும்.

Getty Images
இதுகுறித்த நடாத்தப்பட்ட ஆய்வொன்றில்,
நரம்புகளை தூண்டுவதற்கும், தசைகளை சுருக்குவதற்கும், தளர் வடைய செய்வதற்கும், தண்ணீர் மற்றும் தாதுக்களின் சம நிலையை பராமரிப்பதற்கும் மனித உடலுக்கு சிறிதளவு சோடியம் (உப்பு) தேவைப்படுகிறது.
ஆனால் உப்பை அதிகளவு எடுத்து கொள்வது இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பை குறைப்பதன் மூலம் தமனிகளின் சீரற்ற செயல்பாடுகளால் இதய நோய் ஏற்படும் அபாயத்தை 4 சதவீதம் குறைக்க முடியும்.
 பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 6 சதவீதம் குறைக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெளிவுபடுத்தி உள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        