வீட்டின் சாவியை எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டைக் கட்டும் போது ஏற்படும் சில தவறுகளால் செல்வ இழப்பு ஏற்படுகிறது.
ஆனால் வீடு கட்டிய பின்பும் பண நெருக்கடி ஏற்படுகிறது என்றால் நீங்கள் கட்டாயம் என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் வீடுகள், அலுமாரிகள் மற்றும் வாகனங்களின் சாவிகள் என 4 முதல் 5 வரை இருக்கும்.
அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒன்றாக இது இருக்கிறது. வாஸ்து படி சாவியை நாம் வைத்திருக்கும் இடம் மிகவும் முக்கியமானது. நாம் சாவியை எங்கு வைக்கிறோம் என்பதைப் பொறுத்து சுப பலன்கள் கிடைக்கும்.
அதாவது வீட்டின் சில திசைகளில் சாவியை வைக்கக் கூடாது.
அந்தவகையில் வீட்டிற்கு முக்கியமானதாக இருக்கும் சாவியை எந்த திசையில் வைக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
சாவி வைப்பதற்கு சிறந்த இடம் எது?
சாவி நேர்மறை அல்லது எதிர்மறை ஆற்றலை உருவாக்குகிறது. எனவே இதை சிறந்த ஒர் இடத்தில் வைக்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, எக்காரணம் கொண்டும் சாவியை ட்ராயிங் அறையில் வைக்கக் கூடாது.
வீட்டின் பூஜை அறையில் கூட சாவி வைப்பதை தவிர்க்க வேண்டும். வழிபாட்டுத் தலம் வீட்டில் மிகவும் புனிதமான இடம். எனவே இங்கு வைப்பது நல்லதல்ல.
வீட்டின் சமையல் அறையில் சாவி வைப்பதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்துடன் தொடர்புடைய இடமாக இருப்பது சமையலறை. எனவே இங்கு சாவி வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
மேற்கு திசை சாவியை வைக்க சிறந்த திசை என்று கூறப்படுகிறது. வடக்கு அல்லது கிழக்கு மூலையில் வைக்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி சாவி மேஜை, நாற்காலி அல்லது குழந்தைகள் அறையில் சாவியை வைப்பது எதிர்மறை ஆற்றலைத் தரும்.
நீங்கள் பயன்படுத்தாத சாவிகளை ஒருபோதும் பூட்டி வைக்காதீர்கள். இது உங்கள் நிதி வளர்ச்சியை தடுக்கும்.
மேலும் பழைய சாவிள் மற்றும் துருப்பிடித்த சாவிகளை வீட்டில் வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |