Mobile phone-களில் இருக்கும் இந்த சின்ன துளை எதற்கு தெரியுமா?
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் செல்போன் என்பது நாம் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும்.
எல்லா விதமான செயல்பாட்டிற்கும் செல்போன் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் விலை வரையிலான செல்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. விலைக்கேற்ப அதன் சிறப்பம்சங்களும் இருக்கின்றன.
நாம் அன்றாட பயன்படுத்தும் இந்த செல்போனின் வெளிப்பகுதியில் இருக்கும் இந்த துளை எதற்கு என்று தெரியுமா?
சிலருக்கு தெரிந்திருந்தாலும் பெரும்பாலனவர்களுக்கு இந்த துளை எதற்கு என்ற விடை தெரியாது.
எதற்கு தெரியுமா?
அந்த மிகச்சிறிய துளை நம் போனின் இரைச்சலை ரத்து செய்யும் மைக்ரோபோன் ஆகும்.
நாம் செல்போனில் பேசும் போது செயல்படும் மைக்ரோஃபோன் அதுதான். நாம் யாரையாவது செல்போனில் அழைக்கும் போது, இந்த மைக்ரோஃபோன் இயக்கப்படும்.
அந்த சிறிய துளை சரியாக நம் குரலை பிக்கப் செய்து மறுமுனையில் கேட்பவருக்கு தெளிவாக கொடுக்கிறது.
அதே நேரத்தில் சுற்றிலும் இரைச்சல் இருந்தாலும் இந்த மைக்ரோபோன் அனைத்து வித சத்தங்களையும் உள்வாங்காது. செல்போனில் அடிப்பகுதி என்பதால் இரைச்சலை உள்வாங்குவதில் தடை இருக்கும்.
அதே நேரத்தில் நாம் பேசும் ஒலி மிகச்சரியாக துளை அருகே இருப்பதால் குரல் தெளிவாக எதிர்தரப்புக்கு கேட்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |