நீங்கள் ஊறுகாய் பிரியரா ..? அளவுக்கு மீறி எடுத்து கொள்ளாதீங்க.. ஆபத்தாம்
ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். மாங்காய், எலுமிச்சை முதல் சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, மீன் மற்றும் கோழி என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் ஊறுகாய் செய்யப்படுகின்றது.
இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவருக்கும் விருப்பம் உள்ள ஒரு சுவையான உணவாகும். இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது.
ஏனெனில் ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. தற்போது அவை எனனென்ன என்பதை பார்ப்போம்.
அந்தவகையில் அதிகமாக ஊறுகாய் சாப்பிடுவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- ஊறுகாயை அதிகமாக சாப்பிடுவதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படுகிறதாம். ஊறுகாய் மட்டுமல்ல, எந்த ஒரு உணவையும் நீங்கள் அளவிற்கு மீறி உட்கொண்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
- அதிகமான உணவிற்கு பின் ஏற்படும் குமட்டல், இதை பலரும் உணர்ந்திருக்கலாம். ஆனால். அளவிற்கு அதிகமாக சாப்பாட்டோடு சேர்த்து ஊறுகாயும் சாப்பிடும் போது குமட்டல் ஏற்படுமாம்.
- பொதுவாக இரத்த கொதிப்பு உள்ளவர்களில் சிலர் இதை உணர்ந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அதிகமாக உப்பு சேர்த்து உணவு சாப்பிடும் போதும், ஊறுகாயை சேர்த்து சாப்பிடும் போதும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
- அதிகப்படியாக ஊறுகாயை சேர்த்துக் கொள்வதனால், சிறுநீரகத்தின் வேலை பளு அதிகமாகிறது. இதனால் சிறுநீரகத்தின் செயல்திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது.
- அதிகமாக ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு வயிற்று புண். உங்களுக்கு தெரியுமா அல்சர் என்று சொல்லப்படும் இந்த வயிற்று புண் நாளடைவில் புற்றுநோயாக மாற வாய்ப்பிருக்கும்.
- ஊறுகாய் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு எளிதாக நோய் தொற்று ஏற்படுகிறதாம்.
- ஊறுகாயை அளவிற்கு அதிகமாய் சாப்பிடுபவர்களுக்கு கோபம் காரணத்தினால் ஏற்படும் மன அழுத்தம் அதிகமாய் ஏற்படுகிறதாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.