கழுத்து வலியால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த பயிற்சியை செய்தாலே போதும்
கழுத்து வலி என்பது அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைதான்.
பெரும்பாலும் கழுத்து வலியானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் சந்திக்கிறார்கள்.
கழுத்து வலி வந்தால் நம்மால் எந்த ஒரு வேலையினையும் முழுமையாக செய்ய முடியாது. எல்லா வேலைகளும் பாதியாகவே நிற்கும்.
எனவே இவற்றை எளியமுறையில் நீக்க யோகாசனத்தில் வக்கிராசனம் உதவியாக இருக்கின்றது. தற்போது அவை எப்படி செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.
செய்முறை
- விரிப்பில் கால்களை நீட்டி அமரவும். வலது காலை மடித்து வலது பாதத்தை இடது கால் முட்டியின் அருகே வைக்கவும். வலது கையை வலது புட்டத்திற்கு பின்னால் தரையில் வைக்கவும்.
- இடது கையை வலது முட்டியின் மேல் வழியாக கொண்டு வந்து வலது கணுக்காலை பிடிக்கவும்.
- தலையை திருப்பி முகவாயை வலது தோளுக்கு நேர் மேலே வைக்கவும். 30 வினாடிகள் இதே நிலையில் இருந்த பின் காலை மாற்றி செய்யவும்.
- குடலிறக்கம், அல்சர் மற்றும் தீவிர முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.
பலன்கள்
- மலச்சிக்கலை போக்குகிறது. சீரணத்தை மேம்படுத்துகிறது.
- கழுத்து வலியை போக்குகிறது.
- தைராய்டு சுரப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
- வயிற்றிலுள்ள அதிக கொழுப்பை குறைக்கிறது..
- மாதவிடாய் கோளாறுகளை போக்குகிறது.
- வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022