உங்களுக்கு நீளமான கூந்தல் வேண்டுமா? அப்போ முட்டையை இப்படி பயன்படுத்துங்க போதும்
முட்டைகள் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.
முடி உதிர்வு, வறட்சி அல்லது குறைவான முடி வளர்ச்சி உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது. குறிப்பாக முட்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் முடி சேதத்தை சரி செய்கிறது மற்றும் இதிலிருக்கும் கொழுப்பு அமிலங்கள் மயிர்கால்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கின்றன.
மேலும் முட்டைகளில் இருக்கும் பயோட்டின் முடி வளர்ச்சிக்கு ஒரு வரமாகும். இது முடி உதிர்வை தடுத்து, புதிய முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
இதனை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து உபயோகிப்பது இன்னும் நன்மையே தரும்.
அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- ஒரு முட்டையை உடைத்துஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை நன்கு கலக்கி சில நிமிடங்கள் நன்கு கலக்கிய பிறகு முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் கலவையை உங்கள் தலைமுடி முழுவதும் சீராக தடவி சுமார் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின் முடியை குளிர்ந்த நீரில் நன்கு அலசி வந்தால் நல்ல பயனை பெறலாம்.
- வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் ஒரு முட்டை மற்றும் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை கலந்து இந்த மூன்றையும் சில நிமிடங்கள் நன்கு கலக்கி எடுத்து கொண்டு கூந்தல் முழுவதும் மற்றும் உச்சந்தலையில் நன்றாக தடவி கொள்ளவும். சுமார் 15 நிமிடங்கள் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை நன்கு அலசவும்.
- 2 முட்டைகள் மற்றும் ஒரு ஸ்பூன் வெங்காய சாறு ஆகியவற்றை கொண்டு பேஸ்ட் தயாரித்து இந்த பேஸ்ட்டை தலைமுடியில் நன்கு தடவவும். சுமார் அரை மணி நேரம் இந்த பேஸ்ட்டை தலையில் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசவும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.