மறந்தும்கூட ஸ்மார்ட் போனை இப்படி பண்ணிடாதீங்க! நஷ்டம் உங்களுக்கு தான்
ஸ்மார்ட் போனை எந்த முறையில் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ஸ்மார்ட் போனின் தேவை
தற்போதைய காலகட்டத்தில் ஒரு வீட்டில் ஐந்து பேர் இருந்தாலும் 5 ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன. அந்த அளவிற்கு மொபைலின் தேவை அதிகரித்து உள்ளது.
காலை விடியும் முதல் இரவு தூங்கும் வரை மொபைல் இல்லாமல் பெரும்பாலும் இருக்க முடியவில்லை.
குழந்தைக்கு தூங்குவதற்கு கூட மொபைல் போன் தான் தேவைப்படுகிறது. நாம் மொபைலை பயன்படுத்துகிறோம் என்று சொல்வதை விட, மொபைல் தான் நம்மை பயன்படுத்துகிறது என்று கூட சொல்லலாம்.
அத்தகைய ஸ்மார்ட் போனை சுத்தம் செய்யும் போது சில தவறை செய்தால் அது வீணாகி விடக்கூடிய நிலை தான் ஏற்படும். அதை எவ்வாறு கையாள வேண்டும் என்ற தகவலை இங்கு பார்க்கலாம்.
கூர்மையான ஊசி பயன்படுத்த வேண்டாம்
நீங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய கூர்மையான ஊசியை பயன்படுத்த வேண்டாம்.
ஸ்மார்ட் போனில் உள்ள ஆடியோ ஜாக், சார்ஜிங் போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கிரில் ஆகியவற்றை சுத்தம் செய்ய கூர்மையான பொருளை பயன்படுத்தும் போது, அது முழுவதுமாக சேதம் அடைந்துவிடும்.
சுத்தம் செய்ய கூர்மையான ஊசி பயன்படுத்தும் மொபைல் போன் கடைக்காரர்களுக்கு அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியும்.
ஆனால், நமக்கு அந்த நுட்பம் முழுமையாக தெரியாது. நூறு ரூபாய்க்கு பார்த்து ஆயிரக்கணக்கில் செலவுகளை செய்யும் நிலைக்கு ஆளாகாதீர்கள்.
ஹீட்டர் வேண்டாம்
சிலர் ஸ்மார்ட் போனை சுத்தம் செய்ய தங்கள் வீட்டில் இருக்கும் ஹீட்டிங் ப்ளோவரைப் பயன்படுத்துவார்கள். ஆனால், அது மிகவும் ஆபத்தானது.
ஹீட்டர் பயன்படுத்தி நாம் சுத்தம் செய்யும் போது, எந்த பொருள் சேதம் அடைகிறதோ அதற்கேற்ப நம் செலவுகள் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆல்கஹால் கிளீனர் பயன்படுத்த வேண்டும்
திரவ கிளீனர்கள் கொண்டு ஸ்மார்ட் போனை சுத்தம் செய்யும் போது, அது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அந்த மாதிரி முறையை நாம் கையாள கூடாது.
அதனால் எப்போதும் ஆல்கஹால் அடிப்படையிலான கிளீனரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அப்படி செய்தால் நம் மொபைலுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படாது.
சாதாரண துணி பயன்படுத்த வேண்டாம்
அதே போல், ஸ்மார்ட் போனில் உள்ள ஸ்க்ரீனை சுத்தம் செய்யும் போது சாதாரண துணியை பயன்படுத்தாமல் மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்தால் ஸ்மார்ட் போனில் உள்ள ஸ்க்ரீன் சுத்தமாவதோடு, காட்சியும் உங்களுக்கு தெளிவாக காட்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |