பல ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண்: தெரியவந்த திடுக்கிடவைக்கும் உண்மை
சீனாவில் ஒரு பெண் பல ஆண்டுகளாக பல்வேறு உடல் நல பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுவந்துள்ளார்.
இந்நிலையில், அவரது மூளைக்குள் 8 சென்றிமீற்றர் நீளமுடைய புழு ஒன்று இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
பல ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண்
சீனாவின் Guangdong மாகாணத்தில், 61 வயது பெண் ஒருவர் நீண்ட காலமாக பல்வேறு உட நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார்.
கடந்த ஆண்டின் இறுதியில் அவருக்கு பலமுறை வலிப்பு நோயும் ஏற்படவே, அவரது கணவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆரம்பத்தில் அவருக்கு என்ன பிரச்சினை என்று கண்டுபிடிக்க மருத்துவர்கள் திணறியிருக்கிறார்கள்.
பின்னர், நரம்பியல் நிபுணர் ஒருவர், அந்தப் பெண்ணுக்கு ஸ்கேன் செய்யும்பொது, அவரது மூளையில் ஏதோ கோடு போன்ற ஒன்று தெரிவதைக் கவனித்துள்ளார்.
தெரியவந்த திடுக்கிடவைக்கும் உண்மை
அந்தக் கோடு, ஒரு புழு ஊர்ந்து சென்றதால் ஏற்பட்ட அடையாளமாக இருக்கலாம் என அந்த மருத்துவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலதிக பரிசோதனைகளில், அந்தப் பெண்ணின் மூளையில் ஒரு நாடாப்புழு இருப்பது தெரியவந்துள்ளது.

அவரது மூளையில், 8 சென்றிமீற்றர் நீளமுடைய அந்தப் புழு உயிருடன் இருப்பதைக் கண்ட மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றியுள்ளார்கள்.
இப்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக அந்தப் பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
எப்படி அந்த புழு அவரது மூளைக்குள் சென்றது?
இந்த வகை புழுக்கள், சரியாக வேகவைக்காத அல்லது பச்சை மாமிசம் உண்பது, நீரை கொதிக்கவைக்காமல் அருந்துவது மற்றும் உயிருள்ள விலங்குகளை காயத்தின் மேல் தேய்ப்பது போன்ற விடயங்களால் மனித உடலுக்குள் நுழையக்கூடும்.
விடயம் என்னவென்றால், அந்தப் பெண் சிறுமியாக இருக்கும்போது, அவருக்கு பல் வலி ஏற்பட்டதால், அவரது தாய் அந்தச் சிறுமியின் சொத்தைப் பல் ஒன்றிலிருந்த துவாரத்துக்குள் உயிருள்ள தவளை ஒன்றின் காலை நுழைத்து தேய்த்தாராம்.
அதாவது, அப்படிச் செய்தால், பல்லிலிருக்கும் புழுக்களை அந்த தவளையின் கால் வெளியே கொண்டுவந்துவிடும் என்ற மூட நம்பிக்கை சீனாவில் சில இடங்களில் நிலவுகிறதாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |