மதியம் ஒரு குட்டித் தூக்கம் போடுங்கள்: ஜேர்மன் பெடரல் மருத்துவத்துறை தலைவர் கூறும் பயனுள்ள தகவல்
ஜேர்மன் மருத்துவர்கள், பணி செய்வோர் மதியம் ஒரு குட்டித் தூக்கம் போடும் வழக்கத்தை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
ஜேர்மன் பெடரல் மருத்துவத்துறை தலைவர் கூறும் யோசனை
கோடைக் காலத்தில் அதீத வெப்பம் காரணமாக மக்கள் பணி செய்வது பாதிக்கப்படும் என்று கூறியுள்ள ஜேர்மன் பெடரல் மருத்துவத்துறை தலைவரான Johannes Niessen, ஆகவே, பணி செய்வோர் காலையில் சீக்கிரம் எழுந்து நன்றாக வேலை செய்யட்டும், மதியம் ஒரு குட்டித் தூக்கம் போடட்டும் என்னும் யோசனையை முன்வைத்துள்ளார்.
காலையில் நன்கு வேலை செய்வதாலும், மதியம் ஒரு குட்டித் தூக்கம் போடுவதாலும், பணியில் நல்ல விளைவு கிடைக்கும் என்கிறார் அவர்.
பெடரல் மருத்துவ அமைப்பின் மருத்துவர்கள், காலையில் பணியாளர்கள் அதிக வேலை செய்வதால் நல்ல விளைவு கிடைக்கும் என்றும், அதீத வெப்பத்தால் பணி பாதிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.
அதிக வெப்பம் உள்ள நாட்களில் பணியாளர்களால் தங்கள் பணியில் நல்ல பலனைக் காட்ட முடியாது என்று கூறும் மருத்துவர்கள், இரவு வெப்பம் காரணமாக நல்ல தூக்கம் இல்லாமையும் பணியில் கவனம் செலுத்துவதில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
ஆகவேதான், பணி செய்வோர் மதியம் ஒரு குட்டித் தூக்கம் போடுவது பயனுள்ளதாக இருக்கும் என்னும் யோசனையை முன்வைத்துள்ளதாக ஜேர்மன் பெடரல் மருத்துவத்துறை தலைவரான Johannes Niessen தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |