இளைஞரின் வயிற்றுக்குள் முழு வோட்கா போத்தல்: நேபாளத்தில் குடி போதையில் நண்பர்கள் அத்துமீறல்
நேபாளத்தில் இளைஞரின் வயிற்றில் இருந்து முழு வோட்கா போத்தலை மருத்துவர்கள் அகற்றி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட போத்தல்
நேபாளத்தின் ரவுதஹத் மாவட்டத்தில் உள்ள குஜாரா நகராட்சியைச் சேர்ந்த நர்சாத் மன்சூரி(26) Nursad Mansuri என்ற இளைஞர் கடந்த சில நாட்களாக தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ஐந்து நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது நர்சாத் மன்சூரி-யின் வயிற்றில் முழு வோட்கா போத்தல் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், அத்துடன் அந்த போத்தல் அவரது குடலைத் துண்டித்து, மலம் கசிவு மற்றும் குடல் வீக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
ipackdesign
இதையடுத்து நடைபெற்ற இரண்டரை மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது உடலில் இருந்து வோட்கா போத்தல் அகற்றப்பட்டுள்ளது.
மேலும் அவரது உடல்நிலை இப்போது ஆபத்தில் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்து இருப்பதாக தி ஹிமாலயன் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இளைஞரின் வயிற்றுக்குள் போத்தல் திணிக்கப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் கூற்றுப்படி, நர்சாத்தின் நண்பர்கள் குடித்துவிட்டு, அவரது மலக்குடல் வழியாக ஒரு போத்தலை வயிற்றில் வலுக்கட்டாயமாக செலுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
iStock
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஷேக் சமீம் என்ற நபரை ரவுதாஹத் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற சில நண்பர்கள் தலைமறைவாக உள்ளனர், அவர்களையும் தேடி வருகிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.