உக்ரைன் வீரரின் இதயத்தில் பாய்ந்த குண்டை அகற்றும் மருத்துவர்கள்: அவர் சொன்ன வார்த்தைகள்
உக்ரைன் தலைநகரில் போரில் காயமடைந்த வீரர் ஒருவரின் இதயத்தில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டை மருத்துவர்கள் அகற்றும் திக் திக் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
உக்ரைன் தலைநகர் Kyivஇல் உக்ரைன் வீரர் ஒருவரின் இதயத்தில் துப்பாக்கிக் குண்டு ஒன்று பாய்ந்த நிலையில், அதை உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாட்டு மருத்துவர்கள் கொண்ட குழு ஒன்று கவனமாக அகற்றி, அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.
வெளியாகியுள்ள வீடியோவில், அந்த வீரரின் இதயம் துடித்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே, மருத்துவர்கள் அந்த குண்டை அகற்றுவதைக் காணலாம்.
அதன்பின், அறுவை சிகிச்சை முடிந்து, அவர் மருத்துவர்களுடன் நிற்கும் புகைப்படம் ஒன்றையும் காணலாம்.
இந்த சம்பவத்தில் நடந்த சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், அறுவை சிகிச்சைக்குப் பின், அந்த வீரர், போர்க்குற்றவாளியான புடினுக்கு எதிராக மீண்டும் போருக்கு செல்வதில் ஆர்வம் காட்டியுள்ளார் என்பதுதான்!