பிரசவத்தின் போது வயிற்றில் துணிவைத்து தைத்த மருத்துவர்கள்! 3 மாதங்களுக்கு பிறகு நடந்தது என்ன?
பிரசவத்தின் போது வயிற்றில் துணிவைத்து மருத்துவர்கள் தைத்ததால் மூன்று மாதங்களுக்கு பிறகு அதனை அகற்றியுள்ளனர்.
வயிற்றில் துணி
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், அம்லா பகுதியில் காயத்ரி ராவத் என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், கடுமையான வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆற்றில் அடித்துச் சென்றவர் பாறையில் தூங்கிவிட்டு வீடு திரும்பினார்! இது தெரியாமல் இரவு முழுக்க தேடிய பொலிஸ்
அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு வயிற்றில் துணி இருப்பதை கண்டறிந்தனர். பின்பு, நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்து துணியை அகற்றினர்.
அதாவது, இந்த பெண்ணின் வயிற்றில் கடந்த 3 மாதங்களாக துணி இருந்ததால் குடல் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
இதனிடையே, பெண்ணின் அறுவை சிகிச்சைக்காக அவரது தந்தை மற்றும் கணவன் லோன் எடுத்துள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரவிகாந்த் உய்கே கூறுகையில், "பிரசவத்தின் போது சென்ற பெண்ணிற்கு வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |