இஸ்ரேலை அசுர பலத்துடன் வளர அண்டை நாடுகளை ஒடுக்கி அடக்குவது முறையா? கொந்தளித்த நாடு
இஸ்ரேலை மலை போல வளர விடுவதும் அண்டை நாடுகளை ஆயுதங்களைக் கைவிட அழுத்தமளிப்பதும் ஆதிக்கக் கோட்பாடு என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பலவீனப்படுத்தப்படுவது
அமெரிக்காவுடன் புதிதாக மீண்டும் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்ட ஒரு நாள் கழித்து அராக்சியின் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான் மீது திடீரென்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தவும், அந்த மோதலானது 12 நாட்கள் நீடித்த பரஸ்பர தாக்குதலுக்கு காரணமானது.
இறுதியில், ஈரான் அணுசக்தி வளாகங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசியதுடன், அந்த மோதல் முடிவுக்கு வந்தது. கத்தாரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அராக்சி பேசும் போதே, அமெரிக்காவை குறிப்பிடாமல் இதை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் விரிவாக்கத் திட்டத்திற்கு, அண்டை நாடுகள் இராணுவ ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்தப்படுவது அவசியமாகிறது என குறிப்பிட்டுள்ள அராக்சி,
மோசமான பெண் ஒருவருடன் அருவருப்பான செயலில் பிரித்தானியப் பிரதமர் ஒருவர்: சூடுபிடிக்கும் எப்ஸ்டீன் விவகாரம்
இந்த விசித்திரத் திட்டத்தின் கீழ், இஸ்ரேல் தனது இராணுவ ஆயுதக் களஞ்சியத்தை வரம்பின்றி விரிவுபடுத்திக்கொள்ள சுதந்திரம் பெற்றுள்ளது. ஆனால், அண்டை நாடுகள் ஆயுதங்களைக் கைவிடுமாறு கோரப்படுகிறார்கள்.
அண்டை நாடுகள் தங்களின் தற்காப்புத் திறனைக் குறைக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள். மட்டுமின்றி, அறிவியல் முன்னேற்றத்திற்காக தண்டிக்கப்படுகிறார்கள். இதுவே ஆதிக்கக் கோட்பாடு எனவும் அராக்சி தெரிவித்துள்ளார்.

12 நாட்கள் நீடித்த மோதலின் போது, இஸ்ரேல் ஈரானிய உயர் இராணுவ அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் மற்றும் தளங்கள் மட்டுமின்றி, குடியிருப்புப் பகுதிகளையும் குறிவைத்துத் தாக்கியது.
இஸ்ரேல் அழுத்தம்
அப்போது ஈரான், இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதுடன், கத்தாரில் அமைந்துள்ள மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளத்தையும் குறிவைத்துத் தாக்கியது.
இறுதியில் களமிறங்கிய அமெரிக்கா ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது. வெள்ளிக்கிழமை அன்று, மஸ்கட்டில் அமெரிக்காவின் மத்திய கிழக்குத் தூதர் ஸ்டீவ் விட்காஃபுடன் நடைபெற்ற மறைமுக அணுசக்திப் பேச்சுவார்த்தைகளில் அராக்ஷி ஈரானியக் குழுவிற்குத் தலைமை தாங்கினார்.

மட்டுமின்றி, இதுவரையான பேச்சுவார்த்தைகள் மிகவும் நேர்மறையாக இருந்ததாக விவரித்தார். ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு அந்த நாடு அளிக்கும் ஆதரவு ஆகியவற்றையும் விவாதிக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
குறித்த விவகாரத்தை ஈரானிடம் விவாதிக்க அமெரிக்காவிற்கு இஸ்ரேல் அழுத்தமளித்ததாகவே கூறப்படுகிறது. ஆனால், அணுசக்திப் பிரச்சினைக்கு அப்பாற்பட்டு பேச்சுவார்த்தைகளின் வரம்பை விரிவுபடுத்துவதை ஈரான் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |