ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை உணவகத்தில் பணியாற்றுகிறாரா? வைரலாகும் வீடியோ
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றும் வீராங்கனை ஒருவர் உணவகத்தில் பணியாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சீன வீராங்கனை
சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த 33 -வது ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றது. இந்த போட்டியின் போது பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும், சர்ச்சையான விடயங்களும் அரங்கேறின.
அந்தவகையில், ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக்கின் (18) (Zhou Yaqin) என்பவர் தனது முக பாவனைகளால் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது மனதிலும் இடம்பிடித்தவர்.
இவர், சில வாரங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போடியத்தை அலங்கரித்த நிலையில் தற்போது நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், தனது பெற்றோர் நடத்தி வரும் உணவகத்தில் உதவிகளை செய்து வருகிறார். அவரது சொந்த ஊரிலேயே இயங்கி வரும் உணவகத்திற்கு தேவையான உதவிகளை சோ யாக்கின் செய்து வருகிறார்.
??? That cute Chinese gymnast, Zhou Yaqin, who learned the Olympic custom to bite medals after winning a silver one, returned home to work at the restaurant of her parents.
— Lord Bebo (@MyLordBebo) August 16, 2024
For marketing she serves food now in her Olympic uniform in the “Fat Brother”, Local Cuisine Restaurant… pic.twitter.com/RJ63RceWWT
ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற நிலையில் சோ யாக்கின் உணவகத்தில் உணவு பரிமாறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |