பிக்பாஸ் பிரபலம் ஷிவானி இவரை காதலிக்கிறார்! விரைவில் திருமணம்? உண்மையை உடைத்த பிரபலம்
பிக்பாஸ் பிரபலமான ஷிவானி, நடிகர் அசீம்மை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் கூட ஆகலாம் என்று பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான, விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.
அதன் பின்,=கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். இதையடுத்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.
இந்நிலையில் ஷிவானியுடன் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் இணைந்து நடித்த அசீம், ஷிவானியை காதலித்து வந்தார் என்று கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி, புதிதாக துவங்கவுள்ள படத்தில் இருவருக்கும் இணைந்து நடிக்க போவதாகவும் செய்தி வெளியான நிலையில், ஷிவானி மற்றும் அசீம் காதலித்து வருகிறார்கள் என்றும், விரைவில் திருமணம் கூட ஆகலாம் என்றும் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.